சீனாவின் சாதனை : ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தல்!
Wednesday, November 21st, 2018
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது:
ஷியான்-6 செயற்கைக்கோள் மற்றும் 4 சிறிய வகை செயற்கைக்கோள்களை சீனா செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.
மார்ச்-2டி ராக்கெட் மூலம் அந்த செயற்கைக்கோள்கள் கான்ஸு மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
லாங் மார்ச் வரிசை ராக்கெட்டுகளைப் பொறுத்தவரை, 292-ஆவது முறையாக அந்த ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஷியான்-6 செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
Related posts:
வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய தடை விதித்தது மலேசியா
எனக்கு உத்தரவிட முடியாது – டிரம்ப் ஆவேசம்!
அமெரிக்க கூட்டுப்படையின் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ள ரஷ்யா!
|
|
|


