நியுயோர்க் தீவிபத்திற்கு காரணம் சிறுவனின் விளையாட்டே!
Sunday, December 31st, 2017
தனியாக விடப்பட்ட 3 வயது சிறுவன் ஒருவனின் விளையாட்டே அமெரிக்க நியுயோர்க் நகரத்தில் தீ விபத்து ஏற்பட காரணமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து நியுயோர்க்கில் ப்ரொங்க்ஸ் போரோ எனும் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 12 பேர்உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் முடிவிலேயே இந்த தீ ஒரு சிறுவனின் விளையாட்டால் உருவானது என தெரியவந்துள்ளது. இதேவேளைஇந்த தீயினால் சுமார் 20 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ் உரிமை கோரியது!
ஈராக் எல்லையில் துருக்கி தயார் நிலை!
வதந்திகளின் பின் முதல் தடவையாக பொதுவெளியில் தோன்றிய சீன ஜனாதிபதி!
|
|
|


