ஈராக் எல்லையில் துருக்கி தயார் நிலை!

Wednesday, November 2nd, 2016

ஈராக்கின் எல்லைக்கு மிகவும் நெருக்கமாக டாங்கிகளையும், போர் தளவாடங்களையும் துருக்கி நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக விரைவாக மாறுபடுகின்ற இராணுவ சூழ்நிலைகளால் கவலையடைந்திருக்கிற துருக்கி, எல்லை கடந்து நிகழ்கின்ற சம்பவங்களுக்கு பதில் நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதக் குழு என்று துருக்கி கூறுகின்ற குர்து இன பிகேகே அமைப்பு, இராக்கின் வட பகுதியில் அதிக அளவில் செல்வாக்கு பெற்றுவிடும் என்று துருக்கி கவலையடைகிறது,

இராக் அரசோடு கூட்டணியில் இருக்கும் ஒழுங்கற்ற ஷியா முஸ்லீம் ஆயுதக்குழுவினரால், இராக்கில் வாழும் துருக்கி சமூகத்தினர் அச்சுறுத்தப்படுவர் என்றும் துருக்கி கவலையடைகிறது. இராக்கிலுள்ள இந்த சமூகத்தினர் துருக்கியோடு இன அடிப்படையில் தொடர்புடையவர்கள்.

_92215602_b0039109-599e-4305-a543-f8d92c9d76f2

Related posts: