நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவில் ஒரே நாளில் 1321 பேர் பலி!
Saturday, April 4th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 59,162 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,098,456 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 277,161ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,392 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் வரை போராட்டம் தொடரும் !
வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது தென்கொரியா!
விண்வெளியில் பெண்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ரத்து!
|
|
|


