அமெரிக்காவில் பற்றி எரியும் தீ – போராடும் தீயணைப்பு வீரர்கள் !

Wednesday, October 28th, 2020

அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில், இக்காட்டு தீ நேற்றையதினம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 14 ஹெலிகொப்டர்களுடன் 750 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்ற போதும் தற்போது வரை 5% மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

இந்த அனர்த்தம் மின் சாதனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 19 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ காரணமாக நேற்று மட்டும் இரண்டு தீயணைப்பு வீரர்களைக் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் 90 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் சாண்டா அனா பாலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ அருகில் உள்ள ஓரேஞ்ச் கவுண்டிக்கும் பரவியுள்ளது.

Related posts: