நான்கு மாதங்களின் பின் பிரான்ஸ் தாக்குதல் சூத்திரதாரி கைது!

கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சூத்திரதாரி சலா அப்தேசலாம் பெல்ஜியத்தின் பிரேஸிலஸ் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரேஸிலஸ் நகரில் நடந்த தேடுதல் போது, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா, குறித்த நபர் விரைவிலேயே ப்ரான்ஸிற்கு நாடுகடத்தப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாதக் குழுவுக்கு இருக்கும் தொடர்பு, பிற தாக்குதல் திட்டங்கள், பாரிஸில் நடந்த தாக்குதலைத் திட்டமிட்டது, நிதியுதவி செய்தது யார் என்பது போன்ற தகவல்களை சலா அளிப்பார் என தெரியவருகின்றது.
கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலண்டன் பயங்கரவாத தாக்குதல் - இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!
544 பொதுமக்கள் படு கொலை – சிரியாவில் சம்பவம்!
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!
|
|