நாட்டின் வளர்ச்சி வீதத்தை 6.5 சதவீதமாக குறைக்கிறது சீனா !

நாட்டின் வளர்ச்சி இலக்கை 6.5 சதவீதமாக குறைத்து சீனா அறிவித்துள்ளது. சீனா தன்னுடைய பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் கடுமையான சவால்களை சந்திப்பதாகவும், வரும் ஆண்டில் அதிகரிக்கும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்க வேண்டியுள்ளதாகவும் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் லி கெசியாங் தெரிவித்திருக்கிறார்.
சிக்கலான உலக நிலைமை என்று லி கெசியாங் எச்சரித்திருப்பது சீனாவின் வர்த்தக கொள்கைகள் பற்றி அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.
நெருக்கடியான உலக சூழல் குறித்தும் லி கெசியாங் எச்சரித்துள்ளார்.
ஆனால், சீன பொருளாதாரம் பட்டுப்பூச்சி கூட்டிலிருந்து வெளியேவரும் வண்ணத்துப்பூச்சி என்று கூறிய அவர், பொருளாதாரம் பற்றி பெரும் வாக்குறுதியும் அளித்துள்ளார்
Related posts:
மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.
அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு!
பயணிகள் விமானம் விழுந்து விபத்து - ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!
|
|