மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.

Tuesday, April 12th, 2016
ஜேர்மனி உட்பட மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உருவாக்கி வருகின்றார் என புட்டின் குறித்த விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த எழுத்தாளர் பொறிஸ் ரெய்ஸ்சஸ்டர் என்பவர் தனது புதிய நூலில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட படைப்பிரிவினர் தமக்கான காலம் வரும் வரை காத்திருப்பதற்கான பயிற்சியை பெற்றவர்கள், கத்தியால் தாக்குவது, தற்பாதுகாப்பு கலைகள் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என புட்டினின் இரகசிய யுத்தம் என்ற அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரகசிய இராணுவத்தின் தளபதிகள் ரஸ்ய புலனாய்வு பிரிவிலிருந்தும், வான்வெளி தரையிறக்க பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிரியின் பகுதியில் போரிடக்கூடிய இராணுவம் என்பதே புட்டினின் மேற்குலகிற்கு எதிரான போரின் முக்கிய தந்திரோபாயம் எனவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: