நவாஸ் ஷெரீப்பின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

Saturday, September 16th, 2017

பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, உயர்நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 70 வருட கால அரசியல் வரலாற்றின் 15வது பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியினில், நவாஸ் ஷெரீப், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தெரிவித்து, பதவி காலம் முடிவதற்கு முன்னரே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் எதிரான நீதிமன்ற விசாரணைகளை அடுத்து அவர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

பனாமா ஆவணம்’ மூலம் வெளியாகிய தகவல்களுக்கு அமைய லண்டனில் உள்ள ஏராளமான ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து அவரதும் அவரின் குடும்ப அங்கத்தவர்களது சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், நவாஸ் ஷெரீப்பின் புதல்வர்களான ஹூசேன், ஹசன் மற்றும் புதல்வி மர்யாம் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் ஊழல் வழக்குகளை தாக்கல் செய்யும்படி, பாகிஸ்தானிய ஊழல் ஒழிப்பு தேசிய பணியகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த நிலையில், நவாஷ் ஷெரீப்பின் பதவி நீக்கம் காரணமாக வெற்றிடமாகியுள்ள லாகூர் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில், அவரது பாரியார் போட்டியிட உள்ளார் அவர், தற்போது தொண்டை புற்று நோய்க்காக லண்டனில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: