சீன துணைப் பிரதமர் அமெரிக்க எரிசக்தித்துறை செயலர் சந்திப்பு!

Friday, June 9th, 2017

அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளர் ரிக் சீன துணைப் பிரதமர் ஷாங் கயோலியை (Zhang Gaoli)  பீஜிங்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், தொழில்நுட்பம், மாசாக்கம் தொடர்பான வர்த்தகம் மற்றும் ஏனைய காலநிலை தொடர்பான சாதகமாக முயற்சிகளில் சீனாவுடனான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கும் வகையில் அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளரின் சீன விஜயம் அமைந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 195 நாடுகள் இணைந்து பரிஸில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை அமெரிக்க பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தொழில் வாய்ப்புக்களை குறைக்கும் என்ற வகையில், உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: