நடிகர் கலாபவனின் மரணம் ; வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம்!
Friday, May 19th, 2017
நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ளது. கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரரும், மனைவியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் திகதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், கேளரா பொலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!
கடும் பனிப்பொழிவு - பாகிஸ்தானில் 14 பேர் உயிரிழப்பு!
இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப...
|
|
|


