தேடப்படும் குற்றவாளியானார் பர்வேஸ் முஷாரப்!

Friday, September 1st, 2017

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புடோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த படுககொலை வழக்கை விசாரணை செய்து வந்த தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புடோ 2007ஆம் ஆண்டு ராவில்பிண்டியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ராவில்பிண்டி பொலிஸ் துறைக்கு தலைவராக இருந்த சவுத் ஆசிஸ் மற்றும் பொலிஸ் அதிகாரியான குர்ரம் ஷெஷாத் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகைகயில் குறித்த இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்குடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள நீதிமன்றம், அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts: