எங்கள் குழந்தைகளை தூண்டிவிட்டு, உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பிவிட்டீர்கள் – பிரிவினைவாதிகளுக்கு மெகபூபா கண்டனம்!

Wednesday, September 7th, 2016

எங்கள் குழந்தைகளை துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட துண்டிவிட்டு, உங்கள் குழந்தைகளை பத்திரமாக காஷ்மீரை விட்டு அனுப்பிவிட்டீர்கள் என்று மெகபூபா முப்தி பிரிவினைவாதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை நேரடியாக சாடிஉள்ள மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிறார்களை வன்முறைக்கு தூண்டிவிட்ட அவர்கள், தங்களுடைய குழந்தைகளை பத்திரமாக வெளிநாட்டிற்கோ அல்லது மாநிலத்திற்கு வெளியேவோ அனுப்பிவிட்டனர் என்றார். ”நான் எதையாவது பேசிவிடுவேன் என்று என்னுடைய சகாக்கள் அச்சம் கொண்டு உள்ளார்கள். ஆனால், நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். ஒருதாய் தன்னுடைய குழந்தை தீயை தொட முயற்சித்தால் லேசாக அடிப்பார். அதேபோன்று நானும் என்னுடைய மக்களை காப்பாற்ற பணியை செய்து வருகின்றேன்,” என்றார்.

”நான் கோபம் கொள்வேன், நான் உண்மையை தான் பேசுவேன் மற்றும் போராட்டத்தின் போது அவர்கள் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பேன்,” என்று அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மெகபூபா முப்தி பேசினார்.

மாநிலம் அமைதி நிலைக்கு திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த மெகபூபா முப்தி, ”துப்பாக்கிகள்,புல்லட்கள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளுக்கு அச்சம் கொள்ளும் அவர்கள் குழந்தைகளை தூண்டி விடுகிறார்கள். கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார், அவர்கள் (பிரிவினைவாதிகள்) அவர்களுடையை குழந்தைகளை மலேசியா, துபாய், பெங்களூரு மற்றும் ராஜஸ்தானில் படிக்க வைக்கிறார்கள். மாநிலத்தில் அமைதியின்மை நீடித்துவரும் இந்நாட்களில் அவர்களுடைய (பிரிவினைவாதிகள்) ஒரு குழந்தை காயம் அடைந்து இருந்தாலும் நான் அரசியலைவிட்டு விலக தயார்,” என்றார். மேலும் பிரிவினைவாதிகளின் வன்முறை செயல்களை மெகபூபா முப்தி பட்டியலிட்டார்.

03-8-1-300x212 copy

Related posts: