துருக்கி இராணுவ புரட்சி: 44 நீதிபதிகள் கைது!

Tuesday, July 19th, 2016

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். 34 இராணுவ தளபதிகளும் சிக்கியுள்ளனர்.

துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அதிபர் எர்டோகன் மறுப்பு தெரிவிக்கவில்லை.

Related posts: