இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி “இக்பால்” துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்!

Friday, May 5th, 2023

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்ற தீவிரவாதி , பாகிஸ்தான் காவல்துறையினரின் துப்பாக்கி தாக்குதலில்  கொல்லப்பட்டார்.

இக்பால் அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவில் உறுப்பினராக செயற்பட்டார்.

இக்பால் பாகிஸ்தானில் மிகவும் தேடப்படும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கைபர்-பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் அவரை உயிருடன் பிடிக்க உதவுவோருக்கு 10.5 மில்லியன் இந்திய ரூபாய்களை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், கைபர்-பக்துன்க்வா காவல்துறையின் தலைமையதிகாரி- அக்தர் ஹயாத் கான், தேடுதல் ஒன்றின்போது, இக்பால், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இக்பால் 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளில் தேடப்பட்டவராவார்.

அத்துடன் 2009 இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலிலும் இக்பால் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் 7 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான மற்றும் சமிந்த வாஸ் உட்பட ஏழு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் காரணமாக , பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் மண்ணில் சர்வதேச கிரிக்கட் மற்றும் விளையாட்டுகளை நடத்தமுடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: