அரச வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு – நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Monday, August 28th, 2023

அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் குறித்த தகவல்களை எளிய தொழில்நுட்ப செயல்முறை மூலம் திறைசேரி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக புதிய கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளில் சகல வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் உள்ளிடுமாறு அமைச்சு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

முன்பதாக நிதி அமைச்சு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியது.

பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னஜதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், அரசு நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்த முறை மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் பற்றிய தகவல்கள் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு சேகரிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவரத்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: