மின்சார சபையின் நட்டம் 240 வீதத்தால் அதிகரிப்பு!

Wednesday, July 4th, 2018

2017 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் 2016 ஆம் ஆண்டைவிட 240 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அண்மைய அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டில் மின்சார சபைக்கு 49,231 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நட்டம் 14,499 மில்லியன் ரூபாவாகும்.

மின்சார சபையை நடத்திச் செல்வதற்கான செலவு கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 147 மில்லியன்களாக காணப்பட்ட நிலையில் கடந்த வருடம் அந்தத் தொகை இரண்டு இலட்சத்து 72 ஆயிரத்து 962 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களில் நிலவிய வறட்சியுடன் கூடி வானிலை காரணமாக உற்பத்தி குறைந்தமையும் இதற்குக் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் மின் உற்பத்திக்காக 152 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதோடு 2017 ஆம் ஆண்டில் 184 பில்லியன் ரூபாவாக அது அதிகரித்துள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அரச வங்கிகளில் இருந்து 6,108 மில்லியன் ரூபாய் கடனைப் பெற்ற மின்சார சபை, 2017 ஆம் ஆண்டில் 8,691 மில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: