துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வீழ்ந்தது டபிக்!
Sunday, October 16th, 2016
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து அடையாள முக்கியத்துவம் வாய்ந்த டபிக் நகரை துருக்கி ஆதரவு கிளர்ச்சி ஆயுதப்படையினர் கைப்பற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை இந்த நகர் கைப்பற்றப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் வட்டாரங்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இறுதி நாள் மோதல் காட்சியை விவரிக்கும் இஸ்ரேலிய பாரம்பரிய பெயர்களில் ஒன்றாக டபிக் இருப்பதால், இஸ்லாமிய அரசு குழுவின் தாக்குதல்களில் இந்த டபிக் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
துருக்கியோடு சிரியாவின் எல்லைப்பகுதி ஓரமாக அமைந்திருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தொடர்களில் இது ஒன்றாகும். இதனை கைப்பற்ற கடந்த ஆகஸ்ட் மதத்திலிருந்து துருக்கி பெரியதொரு தாக்குதலை தொடங்கியது.

Related posts:
|
|
|


