சுனாமியால் அழிந்துபோன ஜப்பான் ரயில் பாதை மீண்டும் திறப்பு!

Sunday, December 11th, 2016

ஜப்பானில், 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் அழிந்துபோன ரயில் பாதை பகுதி ஒன்று உணர்ச்சிப்பூர்வமான ஒரு நிகழ்வில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

23 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை இயற்கை சீற்றத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு பிரதேசங்களான ஃபுக்குஷிமா மற்றும் மியாகி இடையிலான பாதையாகும். எதிர்காலத்தில் ஆழிப்பேரலையால் (சுனாமியால்) தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த புதிய ரயில் பாதை உள்நாட்டு பகுதியில் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஃபுக்குஷிமா அணு உலைக்கு நெருக்கமாகச் செல்லும் இந்தப் பாதையின் ஒரேயொரு இறுதி பிரிவு இன்னும் மூடப்பட்டிருக்கிறது. அது இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திறக்கப்படாது.

_92915552_gettyimages-2586599

Related posts: