துருக்கியில் கடும் வெள்ளம்!
Tuesday, July 18th, 2017
துருக்கியில் பெய்த அடை மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் சுரங்கப்பாதைகளுக்குள் புகுந்துள்ளதாகவும் பெருந்தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வெள்ளத்தில் சிக்கி பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அடுக்குமாடிக் கட்டடங்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை இரவு பெய்ய ஆரம்பித்த குறித்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.அத்துடன் கடும் மழை மற்றும் தெளிவற்ற தன்மை காரணமாக எண்ணெய் மற்றும் தானிய வகைகளை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் சர்வதேச கப்பற் பாதை மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்கா நாடகமாடுகிறது' - ஈரான் குற்றச்சாட்டு!
85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து - பிலிப்பைன்சில் பலர் பலி!
|
|
|


