துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் ஐவர்!
Sunday, September 1st, 2019
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 16 பேர் காயமடைந்தனர் என அமெரிக்க காவல்துறையினர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவத்துள்ளன.
துப்பாக்கிதாரி ஒருவர் வாகனமொன்றிலிருந்தவாறு இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், குறித்த சம்பவத்தின் போது, அமெரிக்க அஞ்சல் சேவை மகிழுந்து ஒன்று கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், சந்தேகத்துக்குரிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் சில சந்தேகத்துக்குரியவர்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் பிராந்தியத்தில் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், 24 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், மற்றுமொரு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுளளது.
Related posts:
|
|
|


