பிரித்தானியாவில் தொடரும் கொரோனாவின் ஆதிக்கம் : கடந்த 24 மணி நேரத்தில் 870 மரணங்கள் பதிவு!

Friday, April 17th, 2020

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 870-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் நேற்றைய தினம் கணக்கிடப்பட்டதை விட மரண எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் இறந்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் 80 பேரும், வேல்ஸில் 32 பேரும் வடக்கு அயர்லாந்தில் 18 பேரும் என பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பிரித்தானிய மருத்துவமனைகளின் இறப்பு எண்ணிக்கை 13,828 ஆக இருந்தது. இந்த இறப்பு எண்ணிக்கை மருத்துவமனைகளில் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளதால் , பராமரிப்பு இல்லங்கள், தனியார் வீடுகளில் இறப்புகள், முதியோர் இல்லங்களில் இறப்பு போன்றவை இதில் சேர்க்கப்படாததால், அவ்வாறான இறப்புக்களும் ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கொரோனாவின் தாக்கம் இன்றும் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts: