உடன்பாடு கையெழுத்தானால் சீனப்டைகள் வந்துவிடும்  – இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை!

Wednesday, April 19th, 2017

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், அங்கு சீனக் கடற்படை மற்றும் வான் படைத் தளங்கள் அமைக்கப்படுவது உண்மையாகிவிடும் என  இந்திய முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

சீனாவின் காசோலைப் புத்தக இராஜதந்திரம் என்ற தலைப்பில் இந்தியாவின் டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

சீனாவின் கசோலைப் புத்தக இராஜதந்திரத்தில் இருந்து மோசமான பாடத்தைக் கற்ற முதலாவது நாடு இலங்கையாகும். முன்னைய சீன சார்பு மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் புதிய தொடருந்துப் பாதையை அமைக்கவும், கொழும்புத்துறைமுகத்தில் புதிய கொள்கலன் இறங்குதுறை அமைக்கவும் காலியையும் கொழும்பையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைக்கவும் அம்பாந்தோட்டை அருகே புதிதாக மத்தல ராஜபக்‌ஷ பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அமைக்கவும் சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று அம்பாந்தோட்டைத் துறைமுகமும், அதற்கு அருகேயுள்ள வானூர்தி நிலையமும் பயன்படுத்தப்படாதவையை இருப்பதுடன் இலங்கைக்கு ஒரு நிதிச் சுமையாகவும் மாறிவிட்டன.சீனா சுமார் 9 பில்லியன் டொலரை முதலீடு செய்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்காக 1.1பில்லியன் டொலர் கடனை திரும்பி செலுத்த முடியாதிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

கடன் நிவாரணம் தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது இதன்படி சீன நிறுவனம் அம்பாந்தோட்டை தாறைமுகத்தின் 60 தொடக்கம் 80 வீதம் வரையான முகாமைத்துவத்தை 99 அல்லது 50 ஆண்டுகள் வரையில் கட்டுப்படுத்தும் குத்தகையை பெற்றுக்கொள்ளவுள்ளது. இந்த உடன்பாடு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டால் அம்பாந்தொட்டைத் துறைநமுகத்தில் சீனாவின் கடற்படைத் தளமும் அதற்கு அருகில் உள்ள வானூர்தி நிலையத்தில் சீனாவினக் வான் படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகிவிடக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: