தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் இந்தியாவிடம் அமெரிக்க உறுதி!

காஷ்மீர் மாநிலம் உரி இராணுவ முகாமில் கடந்த 18–ந் திகதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதும் இந்தியா தரப்பில் உறுதியான ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த சம்பவத்திலும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது.
இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தற்போது முனைப்பு காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேபாள நாட்டின் தலைமையின் கீழ் நடக்கவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக 2 தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்தியாவின் இந்த முடிவுக்கு தற்போது வலு சேர்ந்து உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகியவையும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்த நாடுகளும் தெரிவித்து உள்ளன. இதனால் சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவலை இன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் போனில் தொடர்பு கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஊக்கம் கொடுப்போரையும் உலகின் பார்வைக்கு கொண்டுவர அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என சூசன் அப்போது உறுதியளித்தார்.ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.
Related posts:
|
|