தில்லியை அச்சுறுத்தும் நச்சுப்புகை : பாடசாலைகளுக்கு 3 நாள் விடுமுறை!

Monday, November 7th, 2016

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவைவிட சுமார் 70 மடங்கு அதிகமாக காற்றில் மாசு அளவு இருப்பதால், இந்திய தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தினங்களுக்கு தில்லியில் கட்டடம் கட்டுதல் மற்றும் இடிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் இதனை அவசரகால நிலைமை என்று வர்ணித்துள்ளார்.நச்சுப்புகையின் அளவு குறித்து தலைநகர் தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சில பள்ளிகள் மாணவர்களை முகமூடி அணியும்படி அறிவுறுத்தி உள்ளது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் அடுத்த விளைச்சலுக்காக அறுவடை செய்யப்பட்ட வயல்கள் கொளுத்தப்படுவது நச்சுப்புகை உருவாகும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

_92297371_gettyimages-621344726

Related posts: