ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, May 15th, 2017

ஜேர்மனியில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யும் பிரித்தானிய குடிமக்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பாக கடந்தாண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியா விலக வேண்டும் என பெரும்பாலனவர்கள் வாக்களித்துள்ளனர்.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பாக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவதை தொடர்ந்து அந்நாட்டில் கடும் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதனால், இந்நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் குடியேற முயற்சி செய்து வருகின்றனர்.உதாரணமாக, ஜேர்மனியில் உள்ள Hamburg நகரில் கடந்த 2015-ம் ஆண்டு ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள் 56 பேர் ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.ஆனால், பிரித்தானியா வாக்கெடுப்பிற்கு பிறகு தற்போது 280 பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும், இதே காலக்கட்டத்தில் Frankfurt மற்றும் Wiesbaden ஆகிய நகரங்களில் 521 பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். 2015-ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட இது 5 மடங்கு அதிகமாகும்.ஒட்டுமொத்தமாக, Darmstadt பகுதியில் மட்டும் இதுவரை 628 பிரித்தானியர் ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.தெற்கு மாகாணமான Baden-Württemberg என்ற பகுதியில் மட்டும் 2015-ம் ஆண்டு 68 பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமையை பெற்றனர். ஆனால், இந்த எண்ணிக்கையானது 2016-ம் ஆண்டில் மட்டும் 386- ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஜேர்மனியில் சுமார் 1 லட்சம் பிரித்தானியர்கள் வசித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஜேர்மன் குடியுரிமை பெற்ற பிரித்தானியர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருக்கும் என ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: