தில்லர்சன்னை பதவி நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் !

Thursday, March 15th, 2018

வடகொரியாவின் அணுவாயுத சவால்கள் குறித்த விடயங்களை கையாளும் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன்னை பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளராக இருந்த ரெக்ஸ்தில்லர்சன், திடீரென பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சீ.ஐ.ஏயின் பணிப்பாளராக இருந்த மைக் பொம்பே நியமிக்கப்பட்டார். இதற்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.

எனினும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்திக்கும் விடயத்தில் ஏற்பட்ட நம்பிக்கையற்றத் தன்மை காரணமாக, தில்லர்சன்னை ட்ரம்ப் பதவி நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு முன்னர், தமக்கு நம்பிக்கையான அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன்படியே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Related posts: