ரஷ்யாவில் நிலநடுக்கம்!

Tuesday, July 18th, 2017

ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மற்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், ரஷ்யாவின் நிகோல்ஸ்கோயே தீவிலிருந்து 200 கி.மீ தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடல் மட்டத்திலிருந்து 6 மைல் 10 கிமீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மிகப்பெரிய சுனாமி ரஷ்யாவை தாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் 7.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் அடுத்த சில நிமிடங்களில் 7.4 எனவும், கடைசியாக 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்பட்டாலே அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: