ஏப்ரல் 18 முதல் சவுதி அரேபியாவில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படும்!

Friday, April 6th, 2018

சவுதி அரேபியாவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18 ஆம் திகதிமுதல் திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார்.

இந்நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக சவுதி அரேபியாவில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.

40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் சினிமா திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: