தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறிய 18 அணுசக்தி திறன் கொண்ட போர் விமானங்கள்!

Wednesday, December 14th, 2022

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தாய்வானின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, தாய்வானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட 21 மொத்த சீனப் போர் விமானங்களில், 18 குண்டுவீச்சு விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கண்காணித்து வருவதாகவும், சீன விமானங்களை கண்காணிக்க அதன் போர் விமானங்கள் மற்றும் தரை அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் அமைச்சகம் மேலும் கூறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு சீனப் போர் விமான ஊடுருவல் குறித்த தினசரி தரவை வெளியிடத் தொடங்கியதில் இருந்து 24 மணி நேர காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறியது இதுவே முதல்முறையாகும்.

சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, 24 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தாய்வானை, அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக, சீன நிலப்பரப்புடன் தீவை இணைப்பதாகவும் அச்சுறுத்தி வருகின்றது.

Related posts:


வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிம...
ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படு...
உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர...