இத்தாலியிருந்து லிபியாவுக்கு பயணித்த கப்பல்

Saturday, August 5th, 2017

லிபியாவுக்கு செல்லும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தாலிய கப்பல் ஒன்று லிபியக் கடற்கரையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொமாண்டான்டே போர்சினி (Comandante Borsini) என அழைக்கப்படும் குறித்த கப்பல், தற்போது லிபியத் தலைநகர் திரிப்போலியை நோக்கி பயணித்துள்ளதாகவும் மேற்படி கப்பலைப் போன்ற மற்றுமொரு கப்பல் லிபியைவை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இத்தாலி உதவி புரிய வேண்டும் என, ஐ.நா ஆதரவுடைய லிபியாவின் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இத்தாலியின் நாடாளுமன்றில் இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பின் மூலம் பலர் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, லிபியாவுக்கு கப்பல்களை அனுப்பி வைப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை, இவ்வருட ஆரம்பம் முதல் இத்தாலியை சென்றடைந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 95,215 எனவும் உயிரிழந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 2,230 எனவும் இத்தாலியின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: