தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கோர விபத்து!

Monday, September 19th, 2016

தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுற்றுலா நகரான ஆயுத்தயா நகரில் ஓடும் ஜௌபிரயா ஆற்றிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகு ஓட்டுநர் திடீரென படகை திருப்பியுள்ளார்.

அப்போது படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ithaly-003-542x406

Related posts: