சந்தேகத்திற்குரிய வெடிப்புகள்: வடகொரியா தொடர்பில் சீனா எச்சரிக்கை!

Sunday, September 24th, 2017

வடகொரியாவில் பூமியதிர்ச்சி ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.3.4 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சிய உணரப்பட்டுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

வடகொரியாவின் வட Hamgyeong மாகாணத்தின் Kilju பகுதியில் இந்த அதிர்வு அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு உணரப்பட்டுள்ளது.சீனாவின் நிலநடுக்கம் கண்காணிப்பு நிறுவனத்தினால் இந்த பூமியதிர்ச்சி கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வட கொரியாவில் இருந்து வெளிவரும் “சந்தேகத்திற்குரிய வெடிப்புகள்” என குறிப்பிடப்படுகின்றது.அண்மைக்காலமாக வடகொரியா அணுவாயுத பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் மற்றுமொரு அணுவாயுத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதங்களில் அறிவிக்கப்பட்ட அதிர்வுகள் Rogue மாநிலத்தில் மேற்கொள்ளப்பட அணுவாயுத சோதனைகளினால் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய அதிர்வும் அணுவாயுத சோதனை என உறுதிப்படுத்தப்பட்டால், அது வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏழாவது அணு ஆயுத சோதனையாகும்.

Related posts: