சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!

Wednesday, September 13th, 2023

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளிகளான இங் கொக் செங் , டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதையடுத்து ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக தேர்வாகியதையடுத்து நாளை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

மேலும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, தர்மன் சண்முகரத்தினம் 2019 மற்றும் 2023 க்கு இடையில் மூத்த அமைச்சராக பணியாற்றினார். 2015 மற்றும் 2023 க்கு இடையில் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மந்திரியாகவும், 2011 மற்றும் 2023 க்கு இடையில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும், 2011 மே முதல் 2019 மே வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

இதேவேளை தர்மன் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐ.நா. உச்சி மாநாட்டிற்கு பயனுள்ள பலதரப்பு பற்றிய பரிந்துரைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவிலும் அவர் உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: