பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Tuesday, March 7th, 2023

சமூக நலன்களை பெற்றுக் கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கி அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதையடுத்து  உதவியை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பில் தகவல்களையும் அரசாங்கம் சேகரித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சமூக நலன் உதவித்தொகை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு இதுவரை மொத்தம் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

சமூக நலன்கருதி பெறப்பட்ட விண்ணப்பங்களில் தற்போது 02 இலட்சம் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், அந்த விண்ணப்பங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிய சலுகைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று இந்நாட்டு மக்கள் நலத்திட்ட உதவிகளுக்குத் தகுதியானவர்களா என்பதைக் கண்டறியவும், அதற்காக வருகை தரும் அதிகாரிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: