நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரது முறைகேட்டால் சபை நடவடிக்கை முடக்கம்!

Saturday, August 17th, 2019


நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரது அறிவிலித்தனமான, ஆளுமையற்ற செயற்பாடு காரணமாக நெடுந்தீவு பிரதேச சபையின் சபை அமர்வின்போது பெரும் குழப்ப நிலை ஏற்றட்டது.

நேற்றையதினம் குறித்த சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன்போது தவிசாளர் சபைக்கு வருகை தராதிருந்துள்ளார். உபதவிசாளர் மரணமடைந்தமையால் அத்தெரிவுக்காக மாதக்கணக்கில் இழுபறி நிலை நெடுந்தீவு பிரதேச சபையில் ஏற்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தவிசாளர் வருகைதராமையால் அவருக்கு பதிலாக தவிசாளர் தன்னிச்சையாக பிறிதொரு உறுப்பினரை சபையின் தலைமையை ஏற்று நடத்துமாறு ஒப்பதல் கடிதமொன்றை கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் தவிசாளரின் நாற்காலியில் வந்தமர்ந்து சபையை தலைமை ஏற்று நடத்த முயற்சித்தபோது சபையின் உறுப்பினர்கள் சட்ட வரைமுறைக்கு முரணாக தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடாக இந்த தெரிவு இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பபு தெரிவித்து அவரை சபையை நடத்த அனுமதிக்காது தமடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் சபையின் பெரும் குழப்பநிலை உருவாகியது.

தவிசாளரோ அன்றி உபதவிசாளரோ சபைக்கு வருகை தராத பட்சத்தில் சபையிலுள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருவரை ஏகமனதாக தெரிவு செய்தல் வேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட ஒருவரே அந்த சபையை நடத்த முடியும் என்று சட்டவரைபில் உள்ளது.

அவ்வாறு இருக்கும் நிலையில் குறித்த நெடுந்தீவு பிரதேச சபையின் செயலாளரும் தவிசாளரது அறிவற்ற செயற்பாட்டுக்கு ஒத்திசைவாக இருந்துள்ளார் என சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாது குறித்த சபையின் தவிசாளரது அறிவற்ற செயற்பாடு காரணமாக பல்வேறு மக்கள் நலன்கள் முடக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடைபெற்ற சம்பவமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையாலாகத்தனத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்கள் பதவி ஆசையில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் நலன்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் காட்டுவது கிடையாது என்றும் நெடுந்தீவு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: