கனிய எண்ணெய் தொடர்பில்ஆய்வு நடத்த உடன்படிக்கை!

Sunday, May 6th, 2018

பிரான்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றுடன் இலங்கையின் கிழக்கு கரையோர பிரதேசத்தில் கனிய எண்ணெய்க்கான புவி தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குஉடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளதாகவும், அது இந்த மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் இயக்குநர்வஜிர தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு அமைய முதல் இரண்டு வருடகாலப்பகுதியினுள், 2 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் 50 ஆயிரம் சதுர கிலோமீற்றர் விஸ்தீரனமான கடற்பரப்பில்ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளது.

Related posts: