இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவும் வாய்ப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை!

Saturday, February 20th, 2021

இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த நாட்களாக குறைவடைந்துள்ள போதும் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை.

அதேபோன்று இலங்கையில் கொழும்பு நகர பகுதியில் தொற்று நிலைமை குறைவடைந்திருந்தாலும், வெளிமாவட்டங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

இதேவேளை, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.

எனவே, இலங்கையில் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்று கவனயீனமாக இருந்தால் தற்போதுள்ளதை விடவும் மோசமான நிலைமை ஏற்படக்கூடும். இதனால் சுகாதார அதிகாரிகள் இந்த நிலைமை ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காகத் துரிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் க...
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் - உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் இடையே கலந்துரையாடல் - கடன் முக...
29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார...