ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் – உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் இடையே கலந்துரையாடல் – கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, February 1st, 2023

உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் உட்பட பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், நிதித் துறையில் முறையான அபாயத்தைக் குறைத்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விநியோக முறையை வலுப்படுத்துதல் கொள்கை நிச்சயமற்ற தன்மையை குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பது மற்றும் அவற்றை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: