புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை – அவுஸ்திரேலியா !

Wednesday, September 4th, 2019


கடல் மார்க்க, சட்டவிரோதப் புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைத் தலைவர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

படகு மூலம் சட்டவிரோதமாகப் புலம் பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் பற்றி எச்சரிக்கை செய்வதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

2013 ஆம் ஆண்டில், செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைகளை நிர்மாணித்ததிலிருந்து அவுஸ்திரேலியா, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி 12 ஆட்கடத்தல் படகுகளில் இருந்த 204 பேரை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. எந்த ஒருவரும் அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தில் வெற்றி பெறவில்லை என, அவுஸ்திரேலியாவின் செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரைக் புரூணி AM, CSC தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா ஒரு வலுவான மற்றும் பயனுள்ள உறவைப் பேணி வருகிறது. நாம் ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கும், ஆட்கடத்தல்காரர்கள் இலக்கு வைக்கும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு விழிப்பூட்டுவதற்கும் மற்றும் கடலில் மக்கள் இறப்பது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணிபுரிகிறோம்டு என மேஜர் ஜெனரல் புரூணி குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் ஆட்கடத்தல் படகு ஒன்று கைப்பற்றப்பட்ட பின், கடந்த மாதம் 13 சட்டவிரோத குடியேற்றவாசிகள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதிலிருந்த 13 ஆண்களும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 2019 மே மாதத்தில் மேலும் இரண்டு படகுகளில் கைப்பற்றப்பட்ட 25 பேர், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.

அவுஸ்திரேலியாவின் தீவிரமான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளின் படி, சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்பவர்கள், அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு சட்டவிரோத பிரயாணத்திற்கு முயற்சிப்பதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு சட்டரீதியாக புலம் பெயர்வதற்கு அவர்களுக்கு உள்ள ஏதேனும் வாய்ப்பை சுயமாகவே இழந்து விடுகின்றனர்டு

அவுஸ்திரேலிய அரசாங்கம், 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம், சாத்தியமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆட்கடத்தல் வியாபாரத்தில் இணைந்து கொள்வதைத் தடுக்க டுபூச்சிய வாய்ப்புடு (அறவே இல்லை) என்ற பிரசாரத்தை ஆரம்பித்திருந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாகப் பயணம் செய்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும், அவுஸ்திரேலியாவின் வலுவான கொள்கை பற்றியும் இதன் மூலம் தெளிவு படுத்தப்படுகின்றது. இந்த வெற்றிகரமான பிரசாரம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் வாயிலாக இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

இந்தப் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் திரைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. இலங்கையின் திரைப்பட இயக்குநர்கள், சட்டவிரோத கடல் மார்க்க புலம் பெயர் முயற்சிகளுக்கான ஆபத்துக்கள், பின்விளைவுகள் பற்றி குறுந்திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என மேஜனரல் புரூணி மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள், திரைப்பட இயக்குநர்களின் இந்தப் பிரசார முயற்சிகள் மூலம் முற்றுப்பெறலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கடல் மார்க்க பிரயாணம் பெறுமதியற்றது, அவர்கள் தமது வாழ்க்கையை ஆபத்துக்கு உட்படுத்துகின்றனர் அல்லது அதிலுள்ள நிதிப் பொறுப்புக்கள் போன்ற விடயங்கள் பற்றி, இலங்கை முழுவதும் வாழும் மக்கள் விளங்கிக் கொள்வதற்கான எமது முயற்சிகளை நாம் நிறுத்தப் போவதில்லை. இந்தச் செய்தியை இலங்கை மக்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்டு.

சட்டவிரோத படகு மூலமான பயணம் ஆபத்தானதாகையால், அது அர்த்தமற்றதாகும். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு பூச்சியமாகும்டு என மேஜர் ஜெனரல் புரூணி மேலும் குறிப்பிட்டார்.

Related posts: