கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Friday, November 6th, 2020

கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகளை தொழில் திணைக்களம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்துவதாயின் தொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது அவசியம் என்பதுடன், அது 6 மாதகாலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் இதனை குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் மேலும் இலகு படுத்துவதற்காக கடந்த ஜூன் மாதத்திலிருந்து அமுலுக்கு வரக்கூடிய வகையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது.

எனவே மேற்படி அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தொழில் முயற்சியாளர்கள் தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கமான www.labourdept.gov.lk என்ற முகவரியில் பிரவேசித்து, உரியவாறு அனுமதிகோரல் விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.

அதேபோன்று கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைய இருந்த இரவு சேவைக்கான அனுமதியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: