எதிர்வரும் 27ஆம் திகதி கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை ஆரம்பம்!
Monday, April 24th, 2017
தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சை பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நடைபெறும் என்று இலங்கை லேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில் சுமார் 23 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் நாளாந்தம் 320 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பரீட்சை முறைமைகள் - பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சு அற...
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை - ஜனாதிபதி ரணில் ...
குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம்...
|
|
|
இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை - சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அரச தல...
பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது உயர்ஸ்தானிகர் மில...


