இலங்கையுடன் ஜெர்மன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

Monday, May 16th, 2016

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையே மின்வலு எரிசக்தி மற்றும் மாநகர அபிவிருத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடு தொடர்பில் மூன்று உயர்மட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனிய பிரதிநிதிகள் இன்று கொழும்பில் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

2020ம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 2000 கோடி அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கும் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்த உடன்படிக்கைகள் அவசியமானவை என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயம் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கை விஜயம் செய்துள்ள ஜெர்மன் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: