பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை !!

Friday, April 2nd, 2021

பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் தினமும் 75 ஆயிரத்திற்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டங்களில் இடமில்லை என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்
ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை திறந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி விட்டு புதிய உடல்களை அங்கு புதைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தியும் விமர்சனமும் கிளம்பியுள்ள நிலையில் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேசில் அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts: