தலிபான் தலைவருடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்ட ட்ரம்ப்!
Wednesday, March 4th, 2020
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலிபான் தலைவருடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
சுமார் 35 நிமிடங்கள் தலிபான் தலைவருடன் தான் தொலைபேசியில் உரையாடியதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கடந்த 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலிபான் தலைவருடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த உரையாடல் சிறப்பாக இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
கலே முகாமில் 7 ஆயிரம் அகதிகள்!
மீண்டும் ஒரு உலகப்போரை சந்திக்க நேரிடுமா?
இந்திய - சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
|
|
|


