தமிழகத்தில்அசாராதண சூழல்: அடுத்து என்ன நடக்கும்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை ஆளுநராக திகழ்ந்த வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை ஆளும் கட்சியில் ஏற்பட்ட பிளவை அடுத்து பன்னீர் செல்வத்திடமிருந்து முதல்வர் பதிவியை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தீவிரமாக உள்ளார்.
இதற்காக அதிமுக எம்எல்ஏகளை தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சசிகலா, தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Related posts:
|
|