பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!

Wednesday, March 14th, 2018

பிரபல பேராசிரியரும், இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) அமெரிக்காவில் காலமானார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர் .

“காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (A brief history of time) உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை இவர் எழுதி உள்ளார். ஸ்டீஃபன் ஹோக்கிங் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்.

இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார்.

Related posts: