தன்னார்வ தொண்டு வைத்தியர் ரசான் அல் நஜரின் இறுதிக்கிரியைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Monday, June 4th, 2018
காசா எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன வைத்தியரின் இறுதிக்கிரியைகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.
21 வயதான ரசான் அல் நஜர் என்ற தன்னார்வ தொண்டு வைத்தியர், கடந்த வௌ்ளிக்கிழமையன்று இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களினால் வாரந்தோரும் 119 பேர் வரை கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குடும்ப காரணத்திற்கு நியூஸி. பிரதமர் கீ திடீர் இராஜினாமா!
நோபல் பரிசு பெற்றவர் மனைவியை விடுவித்தது சீனா!
16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை!
|
|
|


