குடும்ப காரணத்திற்கு நியூஸி. பிரதமர் கீ திடீர் இராஜினாமா!

Wednesday, December 7th, 2016

எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, குடும்ப காரணங்களுக்காக திடீர் இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது வாழ்நாளில் எடுத்த மிகக் கடினமான முடிவு இதுவென்று குறிப்பிட்ட ஜோன் கீ, “நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை” என்றார்.

மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவராக இருக்கும் கீ, 2017இல் நான்காவது தவணைக்கு போட்டியிடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தேசிய கட்சி புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் வரை துணை பிரதமர் பில் இங்லிஷ் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன் கீ தனது ராஜினாமா குறித்து வானொலி ஒன்றுக்கு குறிப்பிடும்போது, தான் அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடுவதை மனைவி விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் தனது மனைவி அதனை இறுதியானதாகக் கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் அரசியலுக்கு நுழைந்த கீ, நான்கு ஆண்டுகளின் பின் மைய வலதுசாரி தேசிய கட்சியின் தலைவரானார். 2008 ஆம் ஆண்டில் தொழில் கட்சியின் ஒன்பது ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தே பிரதமராக தேர்வானார்.

coltkn-12-06-fr-02152533427_5075737_05122016_mss_cmy

 

Related posts: