ட்ரம்ப் வெற்றிபெறுவார் – சோதிடம் கூறியது சீனக் குரங்கு !

Sunday, November 6th, 2016

அமெரிக்க அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் டொனால்டு டிரம்ப். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் வினோதமான செயல்பாடுகள், சர்ச்சையான பேச்சு ஆகியவற்றின் மூலம் ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் டிரம்ப்.

இந்நிலையில் டம்பா என்ற இடத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப், திடீரென மேடையில் இருந்து இறங்கி, பார்வையாளர் ஒருவரின் குழந்தையை தூக்கிக் கொண்டு மேடைக்கு வந்தார். குழந்தைக்கு முத்தம் கொடுக்க அந்த குழந்தை அழ தொடங்கியது. “future construction worker” என அந்த குழந்தையை வாழ்த்திய டிரம்ப் மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தார்.

மெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் செல்வந்தரான டொனால்ட் டரம்பே வெற்றி பெறுவார் என சீனாவிலுள்ள ஜோதிடக் குரங்கொன்று கணித்துக் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் அமெரிக்காவில் நடத்தப்பட்டுவரும் கருத்துக் கணிப்புக்களில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஹிலரி கிளிண்டன் ஆகியோருக்கிடையே மிகக்குறைந்த வித்தியாசமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே

சீனாவில் குரங்கு இந்த ஆரூடத்தை வெளியிட்டு அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவில் ஷியாங்கு உயிரியல் சுற்றுலா பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் கெதா என்று பெயர் சூட்டப்பட்ட குரங்காரே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று ஆருடம் வெளியிட்டிருக்கின்றது.

இந்த குரங்கு கடந்த ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கால்பந்தாட்ட போட்டியின் போது கோப்பையை போர்த்துக்கல் சுவீகரிக்கும் என துல்லியமாக கணித்திருந்தது.

தற்போது இந்த குரங்கானது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார் என்பதையும் கணித்து கூறியுள்ளது.

குறித்த பூங்காவின் ஊழியர்கள் அமெரிக்க தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து கேட்டறிவதற்காக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலரி கிளிண்டனின் ஆளுயர உருவப்படங்களை வைத்திருந்தனர்.இதனையடுத்து குறித்த இடத்திற்கு ‘கெதா’ என்ற ஜோதிட குரங்கு வரவழைக்கப்பட்டது.பின்னர் அது யாருமே எதிர்பாராத வண்ணம் டொனால்ட் டிரம்பின் உருவ படத்திற்கு முத்தம் கொடுத்து அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் என எதிர்வு கூறியுள்ளது

இது தொடர்பான கானொளியை பூங்கா ஊழியர்கள் தமது வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டும் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் ஒன்று வெற்றி பெற போகும் அணியை சரியாக கணித்திருந்ததுடன் குறித்த குரங்கும் ரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன் அணியை சரியாக கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts: